குழந்தைகளுக்கான எங்களின் ஆங்கில பாடப் பயிற்சியான Primary Plus, ஆறு முதல் 11 வயதுள்ள உங்கள் குழந்தையை ஒரு பாதுகாப்பான, ஊக்கமளிக்கும் சூழலில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஊக்கப்படுத்திடும்.

ஆங்கிலம் மட்டுமே பேசப்படுகின்ற ஓர் இடத்தை நாங்கள் உருவாக்கிடுவோம். தங்களை மையப்படுத்திய ஒரு கற்றல் சூழலை குழந்தைகள் உணர்ந்திடுவர். ஆங்கிலத்தில் தங்கள் புலமையை மேம்படுத்துகின்ற அதேசமயத்தில், குழந்தைகளின் தன்னம்பிக்கையும் வளர்ந்திடும்.

ஊக்கமளித்திடும். ஈடுபாட்டை ஏற்படுத்திடும். உந்துதலை அளித்திடும்.

உங்கள் குழந்தை: 

 • தனது படுக்கையறை முதல் அருகாமைப் பகுதிகள் வரை தனது சுற்றுப்புறப் பகுதிகள் போன்ற பரிச்சயமான தலைப்புகள் பற்றி ஆங்கிலத்தில் பேசுவதன் மூலம் தன்னம்பிக்கையை கடமைத்திடுவார்

 • உற்சாகமான விளையாட்டுகள் மற்றும் குழுச் செயல்பாடுகளின் மூலம் - அதாவது கடல் முதல் விண்வெளி வரையிலான இயற்கை குறித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திடுவார்

 • வகுப்பறைக்கு அப்பாற்பட்ட எதிர்காலத்திற்காகத் தன்னைத் தயார் செய்யக்கூடிய முக்கியமான வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்திடுவார்

கற்கைநெறிகள்

முதல்நிலை இளம் கற்கையாளர்கள் (வயது 6 – 7)

 • முதலில் வார்த்தை நிலையிலும், பின்பு வாக்கிய நிலையிலும் ஆங்கிலத்தில் வாசிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்வார்

 • பரிச்சயமான தலைப்புகளைப் புரிந்துகொண்டு, அவற்றின் மீதான தனது யோசனைகளை ஆங்கிலத்தில் வழங்கிடுவார்.

கனிஷ்ட இளம் கற்கையாளர்கள் (வயது 8 – 10)

 • படைப்பாற்றலுடன் எழுதுதல் போன்ற செயல்பாடுகளில் பரிச்சயமான தலைப்புகள் குறித்த புதிய சொற்தொகுதிகளைக் கற்றுக்கொண்டு பயிற்சி செய்தல்

 • இன்னும் சிக்கலான மொழியைப் பயன்படுத்தி யோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கி, ஒப்பிடுதல்.

இடங்கள்

இக் கற்கைநெறியானது பின்வரும் பிரிட்டிஷ் கவுன்சில் நிலையங்களில் கற்பிக்கப்படும் 

தவணை திகதிகள்

தவணை

திகதிகள்

1ம் தவணை 7 ஜனவரி - 5 ஏப்ரல் 2020
2ம் தவணை 23 ஏப்ரல் - 24 ஜூலை 2020
3ம் தவணை 25 ஆகஸ்ட் - 19 டிசம்பர் 2020

விலை

கற்கைநெறிகள்

கட்டணம் (கொழும்பு, கண்டி, மாத்தறை)

கட்டணம் (யாழ்ப்பாணம்)

முதல்நிலை இளம் கற்கையாளர்கள் (வயது 6 -7 ) ரூ. 20,000 x 6 தவணைகள்  ரூ. 18,500 x 6 தவணைகள் 
கனிஷ்ட இளம் கற்கையாளர்கள் (வயது 8 – 10) ரூ. 20,000 x 6 தவணைகள்  ரூ. 18,500 x 6 தவணைகள்

* இது ஒரு வருட கற்கைநெறியாகும். பாடநெறி கட்டணத்தை ஆறு தவணைகளில் செலுத்தலாம். தவணைகள் ஒரு வருட காலப்பகுதியில் பரவுகின்றன.

கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம். மீளப் பெறல்கள் உங்கள் பிள்ளையின் முதலாவது வகுப்பு ஆரம்பிக்க முன்னர் வரை மாத்திரமே வழங்கப்படுவதோடு, நிர்வாகக் கட்டணமாக ஒரு தொகை கழிக்கப்படும்.

கட்டணத்தில் உள்ளடங்குபவை : பிரிட்டிஷ் கவுன்சில் மாணவர் கோப்புறை, குறிப்பு புத்தகம், தொகுப்புப் புத்தகம்

மேலதிக செலவீனங்கள் : கற்கைநெறி நூல்கள் மற்றும் எழுது பொருட்கள்

தவணைக் கொடுப்பனவுகள்

உங்களிடம் கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் இருப்பின், 0% வட்டி இலகு கொடுப்பனவு திட்டத்தின் ஊடாக கட்டணத்தை செலுத்த முடியும். மேலதிக விபரங்களுக்கு எமது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்.

கழிவுகள் மற்றும் சலுகைகள்

பல் தவணை பதிவு சலுகை

உங்கள் பிள்ளையை 3 தொடர்ச்சியான தவணைகளுக்கு ஒரே தடவையில் நீங்கள் பதிவு செய்தால், கட்டணக் கழிவொன்று வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு எமது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும். 

*பல் தவணை சலுகை மற்றும் குடும்ப கழிவு சலுகை என்பவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது என்பதை கவனத்திற் கொள்ளவும்.

குடும்ப கழிவு சலுகை

ஒன்றிற்கு மேற்பட்ட உங்களது பிள்ளைகள் (ஒரே குடும்பத்தை சேர்ந்த) பிரிட்டிஷ் கவுன்சிலின் இளம் கற்கையாளர் கற்கைநெறியை மேற்கொண்டால்> அவர்களுக்கு விசேட குடும்ப கட்டணக் கழிவொன்று வழங்கப்படும். இக் கட்டணக் கழிவு செயற்படும் முறை பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

குழந்தைகளின் எண்ணிக்கை கழிவு
1ம் குழந்தை

கழிவில்லை

2ம் குழந்தை

10% கழிவு*

3ம் குழந்தை

20% கழிவு*

*விதிகள் மற்றும் நிபந்தனைகள்:

 • இச் சலுகை ஒவ்வொரு தவணைக்கும் செல்லுபடியாவதோடு இளம் கற்கையாளர்கள் வகுப்புகளைச் சேர்ந்த சகோதரர்களுக்கு மட்டுமே உரியது.
 • அனைத்து சிறுவர்களும் ஒரே தவணையில் கற்பவர்களாக இருத்தல் வேண்டும்.
 • இக் கட்டணக் கழிவைப் பெற்றுக்கொள்ள எம்மிடம் கற்கும் உங்களது அனைத்து சிறுவர்களதும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களைக் கையளிக்கவும். நீங்கள் ஏற்கனவே பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கியிருப்பின் இதனைப் பொருட்படுத்த வேண்டாம். 
 • தாமதமாக கையளிக்கப்படும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
 • குடும்ப கட்டணக் கழிவு சலுகை மற்றும் பல் தவணை சலுகை என்பவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது. 

பதிவு செய்தல்

இளம் கற்கையாளர்கள், வயது மற்றும் ஆற்றலுக்கு அமைவாகவே வகுப்புகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவர். இளம் கற்கையாளர்கள் கற்கைநெறிகள், நான்கு நிலைகளைக் கொண்டிருப்பதோடு அவை இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. உங்கள் பிள்ளை ஒரு பிரிவை நிறைவு செய்ய 4 தவணைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதோடு, ஒரு நிலையை நிறைவு செய்ய 8 தவணைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும். நீங்கள் பதிவினை மேற்கொள்ளும்போது நிலைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பிள்ளை பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புதியவராக இருப்பின், அவர்களுக்கு பொருத்தமான நிலையை அறிவதற்காக தகுதிகாண் சோதனை ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும். எமது ஆங்கில மொழி நிலையங்களுக்கு விஜயம் செய்து கற்கைநெறிக்கான பதிவினை மேற்கொள்வதுடன் தகுதிகாண் சோதனைக்கும் பதிவு செய்யுங்கள்.

ஆங்கிலமும் இன்னும் பலவற்றையும் கற்றிடுக

எங்கள் ஆங்கில பாடப் பயிற்சி வகுப்புகளிலுள்ள இளம் மாணவர்கள், தங்களுக்குப் பிடித்தமான செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் கற்கின்றனர். அவர்களின் ஆங்கிலத் திறன்களை மேம்படுத்துவதற்கு எங்களின் நிபுணத்துவ ஆசிரியர்கள் உதவுகின்றனர் - மேலும் படைப்பாற்றல், விமர்சனச் சிந்தனை, பிரச்சினையைத் தீர்த்தல் மற்றும் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதிலும் உதவுகின்றனர். நாங்கள் எவ்வாறு கற்பிக்கிறோம் என்பது குறித்து மேலும் அறிந்திடுங்கள்.

வெற்றிக்கான பாதையை உங்கள் குழந்தைக்கு அமைத்துக் கொடுங்கள்

பெற்றோர்களை எங்கள் பார்ட்னர்களாக நாங்கள் பார்க்கிறோம். உங்கள் குழந்தையின் முன்னேற்றத்தின் மீதான வழக்கமான பின்னூட்டத்தை நீங்கள் பெறுவீர்கள். ஒவ்வொரு வயதிலும், ஆங்கில மொழி மற்றும் முக்கிய வாழ்க்கைத் திறன்களிலான அவர்களின் முன்னேற்றத்தை நாங்கள் மதிப்பிடுவோம். 

இந்த ஆங்கில பாடப் பயிற்சியின் முடிவில் உங்கள் குழந்தை குறைந்தபட்சம் CEFR (Common European Framework of Reference for Languages)-இல் A2-ஐப் பெறுவதே எங்கள் இலக்கு.

உங்கள் குழந்தை வீட்டில் வைத்து கற்றலைத் தொடர்வதற்கு, Primary Plus ஆன்லைன் போர்ட்டலுக்கான உள்நுழைவையும் நீங்கள் பெறுவீர்கள்.

இதையும் அனுக