பல தசாப்தங்களாக அனைத்து வயது மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்பித்த அனுபவத்தை நாம் கொண்டிருப்பதால், எமது கற்கைநெறிகள் பயன்மிக்கவையாகவும் செய்முறை கற்கை வடிவத்தைக் கொண்டிருப்பதையும் பொது, கல்வி சார், தொழில் சார் மற்றும் பரீட்சை தயார்ப்படுத்தல் என எமது பல்வகை கற்கைநெறிகள் ஊடாக உறுதி செய்கின்றோம். நாம் ஆங்கில மொழிக் கற்கையின் இலக்கணம், கேட்டல், பேச்சு மற்றும் எழுதுதல் என அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் எமது கவனத்தை செலுத்துகின்றோம்.

கீழுள்ள கற்கைநெறிகளின் விபரங்களை அறிந்து உங்கள் கல்விப் பயணத்தை எம்மோடு ஆரம்பியுங்கள்!

பொருத்தமான கற்கைநெறியை தெரிவு செய்யுங்கள்!

சிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)

சிறுவர் மற்றும் இளையோருக்கான எமது ஆங்கிலக் கற்கைநெறிகள் உங்கள் பிள்ளையின் மொழிக் கற்கையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களது ஆங்கிலத் தொடர்பாடல் ஆற்றலை விருத்தி.

வயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)

உங்கள் திட்டங்கள் எவ்வாறானவையாக இருப்பினும், உங்களது ஆங்கில மொழி கற்கைத் தேவைகளுக்குப் பொருத்தமான பல்வகை கற்கைநெறிகள் எம்மிடம் உண்டு.

எமது ஆங்கில மொழி நிலையங்கள்

கற்றல் சிறப்பு பெறுவதற்கு தகுந்த சூழல் அவசியம். கல்வித் துறையில் நாம் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால், இலங்கையில் உள்ள எமது பாடசாலைகள் அனைத்தும் ஆசிரியர்கள் நன்கு கற்பிப்பதற்கும் மாணவர்கள் ஆர்வமாக கற்பதற்கும் ஏற்றவாறு விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்

எமது பல்வகை இலவச ஒன்லைன் கற்கை வழிமுறைகள் ஊடாக ஆங்கில மொழி தொடர்பான உங்கள் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள். முழுக் குடும்பத்தினருக்கும் ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.

கீழுள்ள வசதியான கற்பித்தல் மையத்தை அழுத்துவதன் மூலமும் அதில் கொடுக்கப்படும் இலகுவான படிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான பரீட்சைக்கு நியமனம் ஒன்றை பெறலாம்.

பிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்?

எம்மோடு இணைந்து ஆங்கிலம் கற்கும்போது நீங்கள் துறைசார் வல்லுநர்களிடம் கற்க முடியும். நாம் 75 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக ஆங்கிலம் கற்பிக்கின்றோம்.