இக் கற்கைநெறியின் விபரங்கள்

இவ் 20 மணித்தியால கற்கைநெறிகள் உங்கள் கேட்டல், பேச்சு மற்றும் உச்சரிப்பு திறன்களை விருத்தி செய்ய உதவுவதோடு, உங்களுக்கு பயன்மிக்க நாளாந்த வாக்கியங்களையும் கற்பிக்கின்றன. நீங்கள் நாளாந்த சூழ்நிலைகளில் ஆங்கிலத்தை பயன்படுத்தும்போது சரளமாகவும் தன்னம்பிக்கையுடனும் உரையாடும் திறனை அதிகரிக்கலாம்.

உங்கள் ஆங்கில நிலை என்னவாக இருந்தாலும், முதல் பாடத்திலிருந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் நாங்கள் உங்களை ஆதரிப்போம்!

நான் பிரிட்டிஷ் கவுன்சிலின் இக் கற்கைநெறியை தெரிவு செய்ய வேண்டும்?

பேச்சு ஆங்கிலக் கற்கைநெறி ஒன்றை எம்முடன் மேற்கொள்ளும் நீங்கள்:

  • தகைமை மற்றும் அனுபவமிக்க ஆசிரியரைப் பெறுவீர்கள்
  • நாளாந்த வாழ்ககைக்கான தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்ய இவ்விருவராகவும் குழுக்களாகவும் செயற்படுவீர்கள் 
  • பல்வேறு ஆர்வமளிக்கும் கற்கை அங்கங்கள் மற்றும் வகுப்பறை செயற்பாடுகள் ஊடாக உங்கள் கேட்டல், பேச்சு, வாசிப்பு மற்றும் எழுத்து திறன்களை பயிற்சி செய்வீர்கள்,
  • ஒரு சுய மொழிக் கற்கையாளராக ஆவீர்கள்
  • ஆங்கிலம் கற்பதை மகிழ்ச்சிகரமான ஒன்றாக உணர்வீர்கள்;
  • நாம் எமது நூலகத்தின் இலவச மேற்கோள் அங்கத்துவத்தை உங்களுக்குப் பெற்றுத் தருவோம். எமது நூலக சேவைகளின் நலன்களை பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு பொருத்தமான நிலை

 

உங்கள் ஆங்கில நிலை என்னவாக இருந்தாலும், எங்களுடன் உங்களுக்காக ஒரு திட்டம் உள்ளது!

நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புதியவராக இருப்பின், உங்களுக்கு பொருத்தமான மட்டத்தை அறிவதற்காக தகுதிகாண் சோதனை ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும். உங்கள் தகுதிகாண் சோதனையை அழைப்பினை மேற்கொண்டு அல்லது எமது ஆங்கில மொழி நிலையங்களில் ஒன்றிற்கு விஜயம் செய்து பதிவு செய்யுங்கள்.

நான் எவ்வாறு மதிப்பிடப்படுவேன்?

  • நாம் உங்கள் முன்னேற்றத்தை தொடர்ச்சியான மதிப்பீட்டு செயற்பாடுகள் மற்றும் பேச்சு செயற்பாடுகளால் அளவிடுகிறோம். 
  • உங்களது ஆற்றல்கள் மற்றும் முன்னேற்றம் தேவையான விடயங்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்காகவே நாம் இதனை மேற்கொள்கிறோம்.

இக் கற்கைநெறிகள் எங்கு கற்பிக்கப்படுகின்றன?

திகதிகள் மற்றும் கட்டணங்கள்

பொது ஆங்கில கற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்ய முன்னர் நீங்கள் ஆங்கில மட்டத் தேர்வு ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும். உங்கள் ஆங்கில மட்டத்தை அறிவதற்கான இச் சோதனை எழுத்து மூலமான மற்றும் சிறியதொரு பேச்சு சோதனையாக அமையும்.

ஆங்கில மட்டத் தேர்வு இலவசம்!

இக் கற்கைநெறி எமது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாண அலுவலகங்களில் கற்பிக்கப்படுகின்றது. அத்துடன் மாத்தறையில் உள்ள எமது துணை ஆங்கில மொழி நிலையத்திலும் கற்பிக்கப்படுகின்றது.

 

தவணை திகதிகள்
1ம் தவணை 7 ஜனவரி - 4 மார்ச் 2020
2ம் தவணை 6 மார்ச் - 22 மே 2020
3ம் தவணை 23 மே - 24 ஜூலை 2020
4ம் தவணை 25 ஆகஸ்ட் - 19 அக்டோபர் 2020
5ம் தவணை 23 அக்டோபர் - 19 டிசம்பர் 2020


ஒவ்வொரு நிலையத்தினதும் கட்டணங்கள் மற்றும் கற்கைநெறி திகதிகள் வேறுபடலாம் என்பதை கவனத்திற் கொள்ளவும். கட்டணங்கள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு உங்களுக்குரிய அமைவிட நிலையத்தை அழுத்துங்கள்

கட்டணங்களில் உள்ளடங்குபவை : மாணவர் கோப்புறை, எமது நூலகத்தின் மேற்கோள் அங்கத்துவம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் கற்கைநெறி சான்றிதழ்

எங்கள் கண்டி மற்றும் யாழ்ப்பாணக் கிளைகளில் நீங்கள் கட்டணத்தை தவணைகளில் செலுத்தலாம்.

மேலதிக செலவீனங்கள் : கற்கைநெறி நூல்கள் மற்றும் தனிப்பட்ட எழுது பொருட்கள்.