Child reading a book

பிரிட்டிஷ் கவுன்சிலின் பதிவு செய்யப்பட்ட ஒரு மாணவர் என்ற வகையில், உங்களுக்கு சில கடமைகள் மற்றும் பொறுப்புகள் உண்டு.

நடத்தை தொடர்பான கொள்கை

அனைத்து பிரிட்டிஷ் கவுன்சில் அங்கத்தவர்கள், அனைத்து ஊழியர்கள் மற்றும் உடைமைகளுக்கு மாணவர்கள் மதிப்பளிக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

நடத்தை தொடர்பான இக் கொள்கை தவறான நடத்தைகள் குறித்து அனைவரும் புரிந்துகொள்வதற்கும் நன் நடத்தைகளை ஊக்குவிப்பதற்கு பின்பற்ற எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உறுதி செய்கிறது 

தவறான நடத்தைகள் இரு வகைப்படும்: விரும்பத் தகாதவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

விரும்பத்தகாத நடத்தைகளுக்கான உதாரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத  நடத்தைகளுக்கான உதாரணங்கள்
வகுப்பிற்கு தாமதமாக வருதல் சண்டை பிடித்தல்
வீட்டுப் பாடங்களை செய்யாதிருத்தல் அடாவடித்தனம்
வகுப்பறையில் அளவுக்கு அதிகமாக தாய் மொழியில் பேசுதல் வகுப்பறைக்கு சேதம் விளைவித்தல்
வகுப்பறையில் உணவு, பானங்களை அருந்துதல் ஏனையவர்களை மரியாதை குறைவாக நடத்துதல்
வகுப்பில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தல் மற்றவர்களின் உடமைகளை சேதப்படுத்தல்

ஆசிரியர்கள்  விரும்பத்தகாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகளை இனங் கண்டால், மாணவர்களுக்கு பிரச்சினை குறித்து விளக்கமளிப்பதுடன் எமது எதிர்பார்ப்புகளையும் தெளிவுபடுத்துவார்கள். நாம் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்

  • முறையான சந்திப்பொன்றுக்கு பெற்றாரை அழைத்தல்
  • பிரிட்டிஷ் கவுன்சில் முகாமையாளர் ஒருவருடன் முறையான சந்திப்பொன்றுக்கு மாணவர்களை அழைத்தல்
  • மாணவர்களுக்கு முறையாக எச்சரித்தல்
  • தீவிரமான சந்தர்ப்பங்களில் அம் மாணவர்கள் பிரிட்டிஷ் கவுன்சிலை விட்டு விலகுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.

பிரிட்டிஷ் கவுன்சிலின் நம்பிக்கையான மற்றும் மதிப்புமிக்க கற்கை சூழலுக்கும் பணிச் சுற்றாடலுக்கும் நாம் அனைவருமே பொறுப்பானவர்கள்.

அடாவடித்தனத்துக்கு எதிரான மற்றும் நடத்தைக் கொள்கைகள்

பிரிட்டிஷ் கவுன்சில் தம்மோடு இணைந்து பணியாற்றும் அனைவர் தொடர்பாகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளது. அத்துடன் உங்கள் மன அமைதிக்காக நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். அது தொடர்பான எமது அர்ப்பணிப்புமிக்க செயற்திட்டங்கள் இதோ :

  • நாம் உங்களுக்கு செவிமடுக்கிறோம்
  • எமது ஊழியர்களை நாம் மிகுந்த கவனத்துடன் தெரிவு செய்வதுடன் அனைவரும் முறைமைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்கிறோம் 
  • பாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக நம்பகமான அறிவுறுத்தலை நாம் வழங்குகின்றோம்
  • பாதுகாப்பாக உணர்வதற்கும், இருப்பதற்கும் அனைவருக்கும் உரிமையுண்டு என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்.

பிரிட்டிஷ் கவுன்சில் அனைவருக்கும் பாதுகாப்பானதொரு இடம் என்பதை உறுதி செய்வதற்காக, நாம் அடாவடித்தனம் மற்றும் முறையற்ற நடத்தை என்பவற்றை கடுமையாக எதிர்ப்பதுடன் இவ்வாறான பிரச்சினைகளை எதிர் நோக்குவதற்காக தகுந்த கொள்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டுள்ளோம்.

இவ் அறிவித்தல் இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் அடாவடித்தனம் மற்றும் நடத்தைகள் தொடர்பான கொள்கைகளின் சுருக்கமாகும். எமது கொள்கைகள் மற்றும் உதவிபெறும் வழிமுறைகள் தொடர்பான முழுமையான பிரதியைப் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர் சேவை பிரிவைத் தொடர்பு கொள்ளவும்.

கொள்கைக்கான நோக்கங்கள்

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் அடாவடித்தனம் மற்றும் நடத்தை கொள்கைகள் அடாவடித்தனம் மற்றும் முறையற்ற நடத்தைகளை தடுப்பதற்கும் எதிர்த்து போராடுவதற்கும் நாம் மேற்கொள்ளும் விடயங்களை சுருக்கமாக அறியத் தருகிறது. இக் கொள்கைகள் நிலையத்தை சார்ந்த அனைவரையும் கவனத்திற் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.

அடாவடித்தனம் / முறையற்ற நடத்தை என்றால் என்ன?

அடாவடித்தனம் என்பது  “தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரு குழு இன்னொருவரை உள்நோக்கத்துடன் அல்லது உள்நோக்கமற்று உடல் ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக காயப்படுத்தும் விதமான நடத்தை” ஆகும்.  

முறையற்ற நடத்தை என்பது “வெறுப்பூட்டும், கேடு விளைவிக்கும் அல்லது சீர்குலைக்கும் விதமான நடத்தை” ஆகும்

எந்த ஒருவருக்கும் அடாவடித்தனம் / முறையற்ற நடத்தையை வெளிப்படுத்தும் இயலுமை உண்டு.

எந்த ஒருவருக்கும் அடாவடித்தனம் / முறையற்ற நடத்தை என்பற்றுக்கு உட்படும் வாய்ப்பு உண்டு.

தடுப்பு

எமது பங்கு

தனிநபர் ஒருவரின் நடத்தை ஏனையவர்களின் நடத்தையில் தங்கியுள்ளது. அதனால், எமது நிலையத்திலுள்ள அனைவரும் மரியாதைமிக்க மற்றும் பண்பான நடத்தையை வெளிப்படுத்த வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். நன் நடத்தையை ஊக்குவிப்பதற்காக நாம் தொடர்ந்தும் ஆர்வத்துடன் செயற்படுகின்றோம்.

முறையிடுதல் / அறியத்தரல் 

முறையீடு செய்யப்படும் எந்தவொரு விடயமும் கடுமையாகவே அணுகப்படும். மேற்கொள்ளப்டும் நடவடிக்கைகளில் தவறு செய்தவர்களும் உள்வாங்கப்படுவர்.

  1. சிறிய பிரச்சினைகளின் போது எமது மூத்த ஊழியர் ஒருவர் உங்களுக்கு ஒத்துழைப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்குவார்.
  2. தீவிரமான பிரச்சினைகளின் போது, குறித்த விடயம் பற்றி ஊழியர்களால் பதிவு செய்யப்படும்.
  3. சிறுவர்கள் சம்பந்தப்பட்ட தீவிரமான பிரச்சினைகளின் போது பெற்றோருக்கு அறியத் தரப்படுவதுடன் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அவர்கள் அழைக்கப்படுவர்.
  4. அவசியமான மற்றும் தகுந்த சந்தர்ப்பங்களின் போது பொலிஸாரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும்.

விளைவுகள்

பின்னூட்டங்கள் எப்பொழுதும் குற்றச்சாட்டை அல்லது முறையீட்டை மேற்கொண்ட தனி நபர்களுக்கு அறியத் தரப்படும்.