பிரிட்டிஷ் கவுன்சில் சர்வதேச வலையமைப்பில் பாரிய நூலக அங்கத்துவத்தை நாம் கொண்டிருப்பதோடு, எமது சேகரிப்பில் 50,000 க்கு மேற்பட்ட அண்மைக்கால நூல்கள் மற்றும் பல்வேறு பயன்மிக்க ஏனைய அங்கங்களும் காணப்படுகின்றன. எமது கொழும்பு மற்றும் கண்டியிலுள்ள நூலகங்களில் 24,000 க்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் பதிவு செய்துள்ளனர்.
பரவசமூட்டும் எம் அமைப்புடன் இணைந்து பின்வரும் நலன்களைப் பெறுங்கள்:
- நூல்களின் பாரிய சேகரிப்பு, CDகள் மற்றும் DVDகள்.
-
ஒன்லைன் வெளியீடுகள் மற்றும் இ-நூல்கள் உள்ளடங்கலாக தொடர்ந்து அதிகரிக்கும் அதியுயர் தரத்திலான 75,000 க்கு மேற்பட்ட ஒன்லைன் வளங்கள்.
-
எமது புதிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான தகவல்கள்
-
சொற்பொழிவுகள், வாசிப்புகள் மற்றும் பயிற்சி முகாம்கள் போன்ற ஆர்வமளிக்கும் நிகழ்வுகளுக்கு அழைப்பு
-
நீங்கள் அங்கத்தவர் ஒருவராக இணைந்து கொண்டதும் எமது ஒன்லைன் அட்டவணையைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் நூல்களை இனங்காணலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது பிரவேசித்து அட்டவணையைப் பார்வையிடுவது மட்டுமே.
இன்றே எமது நூலகத்தில் இணைந்து புத்தக உலகில் தடம் பதியுங்கள்.