இந்த பகுதியில் கீழ் காணும் விபரங்கள் உள்ளடக்கப்படும்:

  • தனியுரிமை,  தரவுப்பாதுகாப்பு மற்றும் தகவல் சுதந்திரம்  
  • பிரிட்டிஷ் கவுன்சில் இணையத்தளத்தை பயன்படுத்துவது, அணுகுமுறை மற்றும் முறைப்பாட்டொன்றை எவ்வாறு மேற்கொள்வது பற்றிய தகவல் 
  • பிரிட்டிஷ் கவுன்சிலினால் பின்பற்றப்படும் கொள்கைகள்  பற்றிய விபரங்கள்
  • பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையின் விதிகள் 

இந்த தகவலானது நேரத்திற்கு நேரம் மாற்றப்படும். 

தனியுரிமை 

தனியுரிமை

எம்முடைய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லவும் எம்மோடு இடைப்படுகின்றவர்களின் நம்பிக்கையை பேணவும் தனிப்பட்ட தகவல்களை  சட்டப்பூர்வமாக, சரியாக பயன்படுத்துவது முக்கியமானது என்று நாம் கருதுகின்றோம் 

ஆங்கிலத்தில் உள்ள  எங்களுடைய முழு தனியுரிமை கொள்கையை  இங்கு வாசிக்கலாம் full policy on privacy.

தரவுப்பாதுகாப்பு

நாங்கள் எவ்வாறு  உங்களுடைய தகவல்களை பாதுகாக்கிறோம் என்றும் உங்களை பற்றி நாம் கொண்டுள்ள தகவல்களை நீங்கள் எவ்வாறு  அடையலாம் என்றும் அறிந்து கொள்ளுங்கள். 

தரவுப்பாதுகாப்பு தொடர்பாக ஆங்கிலத்தில் உள்ள எம்முடைய கொள்கையை இங்கு வாசிக்கலாம் full policy on data protection.

தகவல் சுதந்திரம் 

உலகளாவிய சமூகத்துடன் தொடர்பாடுவதற்கு புதுமையான மற்றும் திறந்த வழிகளை கண்டுபிடிப்பதில் பிரிட்டிஷ் கவுன்சில் பெறுமை கொள்கிறது. உண்மைத்தன்மை மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு ஒரு  உதாரணமாக நாம் எம்மை பற்றி உலகிற்கு வெளிப்படுத்துவது முக்கியமானது என்று நாம் கருதுகிறோம்.

"தகவல் சுதந்திரம் தொடர்பாக ஆங்கிலத்தில் உள்ள எம்முடைய கொள்கையை இங்கு வாசிக்கலாம் full policy on freedom of information"

இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் 

இந்த இணையத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் தொடர்பான குறிப்பிட்ட தகவல்களை குறிப்பிட்டுள்ளது. இந்த பகுதியில் இணையத்தளத்தை யாவரும் அணுகக்கூடிய விதமாய் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விபரங்களை காண்பீர்கள். அத்துடன் கூட முறைப்பாட்டொன்றை எவ்வாறு மேற்கொள்வது பற்றிய விபரங்களையும் காணலாம்.

பயன்பாட்டு விதிமுறைகள்

பிரிட்டிஷ் கவுன்சிலானது இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதற்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்திற்கும், இணையத்தளத்தில் இருந்தும் லின்க்கள் தொடர்புபட்டுள்ளன.

ஆங்கிலத்தில் உள்ள எங்களுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை  இங்கு வாசிக்கலாம் full terms and conditions

அணுகுமுறை 

நீங்கள் எந்த பிரௌசர் இனை பயன்படுத்தினாலும் அணுகுவதற்கு எந்தவொரு விஷேட  கருவியை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் www.britishcouncil.lk இணையதளத்தை பயன்படுத்துவதை இலகுவாதாக்குவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளோம். 

பிரிட்டிஷ் கவுன்சில் இணையத்தளத்தின் அணுகுமுறை தொடர்பான தகவல்களை இங்கு வாசிக்கலாம் website accessibility measures.