ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு இடையே தொடர்புகளையும் புரிதல் மற்றும் நம்பிக்கையையும்  உருவாக்குவதன் மூலம் அமைதி மற்றும் சுபீட்சத்தினை நாங்கள் ஆதரிக்கிறோம்.

 

 ஐக்கிய இராஜ்ஜியத்திலானகலைமற்றும்கலாச்சாரம், கல்விமற்றும் ஆங்கிலமொழியிலானஎமதுஆழ்ந்தநிபுணத்துவங்களைநாங்கள் தனித்துவமாக ஒருங்கிணைப்பதோடு,  100 க்கும்மேற்பட்ட நாடுகளுடனானஉறவுகள் மற்றும் எமது உலகளாவிய இருப்பு மூலம் இளைஞர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும்படைப்பாற்றல் செறிந்தவர்களுடனான இணையற்ற அணுகல்களை கொண்டுள்ளோம். 

 தனி நபர்களின் திறமைகள், நம்பிக்கை மற்றும் தொடர்புகளைப் பெறுவதற்கும்  அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கும், ஐக்கிய இராஜ்ஜியத்துடன் இணைந்து சிறந்த உலகை அவர்கள் உருவாக்குவதற்கும் நாங்கள் நேரடியாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். வலையமைப்புகளை உருவாக்கவும், ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஆராயவும், ஆங்கிலம் கற்கவும், உயர்தரக் கல்வியைப் பெறவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளைப் பெறவும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்.

 ஐக்கிய இராஜ்ஜியத்திலும் உலகளவிலும் நாங்கள் அரசாங்கங்களுடனும் கல்வித்துறை, ஆங்கில மொழி மற்றும் கலாச்சாரத் துறை பங்காளர்களுடனும் நாம் பணியாற்றுகிறோம். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு நன்மைகளை உருவாக்கவும்,  இவர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கவும் நாம் இணைந்து பணியாற்றுகிறோம்.

 நாங்கள் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள மக்களுடன் பணிபுரிகிறோம், மேலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் வதிவிடமாக இருக்கிறோம். 2021-22ல் 650 மில்லியன் மக்களை எட்டினோம்.