எமது ஆங்கிலக் கற்கைநெறிகள்  வெவ்வேறு மட்டங்களில் காணப்படும் வயது வந்த கற்கையாளர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டவை.

எமது கேம்பிரிட்ஜ்  CELTA   தகைமை பெற்ற, அனுபவமிக்க ஆசிரியர்கள் உங்களிடம் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்படுவதை உறுதி செய்வதுடன், நீங்கள் வெற்றிகரமாக உங்கள் இலக்குகளை அடைவதற்கும் ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உரையாடுவதற்கும் உதவுகின்றனர். எமது கற்கைநெறிகளின் ஊடாக உங்களது தொடர்பாடல் திறன் குறித்த இலக்கணம், சொற்தொகுதி, உச்சரிப்பு, கேட்டல், பேச்சு, வாசிப்பு மற்றும் எழுதுதல் என அனைத்து அம்சங்களையும் நீங்கள் விருத்தி செய்வதற்கு எம்மால் உதவ முடியும்.

உங்களுக்குப் பொருத்தமான கற்கைநெறியை தெரிவு செய்யுங்கள்.

Two young people reading out an IELTS brochure

IELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்

எமது IELTS கற்கைநெறிகளில் ஒன்றைப் பின்பற்றி உங்கள் பரீட்சையின் அதியுச்ச பெறுபேறுகளை உறுதி செய்வதற்கு அவசியமான திறன்களையும் அறிவையும் பெறுங்கள்.