வியாபாரங்கள், அரசாங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் 80 வருடங்களுக்கும் மேலாக பணி புரிந்து வரும் நாம், நடைமுறைச் சாத்தியம் மிக்க மற்றும் ஈடுபாடுகளை ஏற்படுத்தும் பயிற்சி மற்றும் மதிப்பீட்டுத் தீர்வுகளை வழங்குகின்றோம்.
வெற்றிக்கான தொடர்பாடல் திறன்களை ஊக்குவிக்க நிறுவனங்களை நாம் வலுப்படுத்துகின்றோம்
80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகக் குழுமங்கள், அரசாங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் அவற்றின் ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் திறன்களை வளர்த்தெடுப்பதில் 80 வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் பங்காண்மைகளை மேற்கொண்ட தன்னிகரற்ற பயணத்தை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
அனைத்து பணி வகிபாகங்களையும் கொண்ட வாண்மையாளர்கள், தொழிற்துறைகள், பணிப் பயன படிநிலையில் காணப்படுபவர்கள், மாணவர்கள், அண்மையில் தமது பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்தோர் அத்துடன் ஆராய்ச்சியாளர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் அளவிடக் கூடிய, ஈடுபாடுகளை உருவாக்கும் தன்மை மிக்க மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கற்றல் தீர்வுகளை உருவாக்க நாம் எமது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகின்றோம்.
உங்களின் வெற்றியை உறுதி செய்யும் நாம் பாடநெறி வடிவமைப்பு மற்றும் அதனை அமுல்படுத்தல் என்பவற்றின் சிரமங்களை நாம் மகிழ்வுடன் ஏற்பதுடன் 4 படிநிலைகளைக் கொண்ட எமது தொடர் செயன்முறயின் ஊடாக கற்றல் மற்றும் விருத்தி, மனித வளத் துறைகள் மற்றும் வியாபார முகாமையாளர்களுக்கு ஆதரவளிக்கின்றோம்.
உங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்த நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குங்கள்
படிநிலை 1 – ஆலோசனை: உங்கள் நிறுவனத்தில் காணப்படும் திறன் இடைவெளிகள் மற்றும் அதன் கற்றல் இலக்குகளை நாம் அடையாளம் காண்போம்.
படிநிலை 2 – வடிவமைப்பு: தனிப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட மற்றும் மதிப்பீடு இணைந்த உள்ளடக்கங்களுடன் அளவிடக் கூடிய மற்றும் தனிப்பட்ட வகையில் பொருத்தமான தீர்வுகளை நாம் உருவாக்குவோம்.
படிநிலை 3: விநியோகித்தல்: உங்களின் பணியாளரகள் முன்னேறுவதை உறுதி செய்ய எமது அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் உங்கள் அணிகளை ஈடுபடுத்துவதுடன் பொருத்தமான மற்றும் மற்றவர்களுக்கு மாற்றப்படக் கூடிய திறன்களை அவர்களுக்கு விருத்தி செய்வர்.
படிநிலை 4 – மீளாய்வு: முன்னேற்றத்தை கண்டறிந்து நான் அதனை அறிக்கையிடுவோம், உங்களின் முதலீட்டின் மீதான நன்மையை அறிக்கையிடுவோம் வெற்றியை அக்கறை கொண்ட தரப்புகளுடன் பகிர உதவுவோம்.
இலவச ஆலோசனை அமர்வு ஒன்றை முன்பதிவு செய்யுங்கள்
ஆங்கிலம் மற்றும் வாண்மை மிக்க தொடர்பாடல் திறன்களுக்கான எமது பயிற்சித் தீர்வுகள்
நடைமுறை அடைவுகளையும் பணித்தலத்தில் நடத்தை மாற்றங்களயும் அவதானிக்க உலகெங்கிலும் உள்ள 80 மில்லியனுக்கும் அதிகமான பயிலுனர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். எமது நிகழ்ச்சித்திட்டத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்குகின்றன:
எமது தீர்வுகள்:
வாண்மை மிகு தொடரபாடல் திறன்கள்: மேம்படுத்தப்பட்ட பேச்சு மற்றும் எழுத்து தொடர்பாடல் திறன்கள் ஊடாக ஈடுபாடு, விளைதிறன் மற்றும் செய்ற்பாடு அதிகரித்தல். ஒவ்வொரு கற்றல் அலகும் நன்கு வரையறுக்கப்பட்ட தொடர்பாடல் திறமை ஒன்றை விருத்தி செய்கின்றது, அது உங்கள் நிறுவனத்தின் இயலுமை சட்டக வடிவமைப்புகளுடன் பொருத்தப்படலாம்.
ஆங்கில மொழித்திறன்கள்: பணித்தலம் மற்றும் சமூக சூழ்நிலைகளில் உங்களின் பணியாளர்கள் அதிக தன்னம்பிக்கை மற்றும் அதிக வினைத்திறனுடன் தொடர்பாட அவர்களை வலுப்படுத்துங்கள். அதி உச்ச முன்னேற்றத்தை அடைய சுய வழிகாட்டல் மற்றும் பயிற்றுனர் தலைமையில் அமையும் அமவுகளில் அவர்களைஈடுபடுத்துங்கள்.
மதிப்பீடு: உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பரீட்சைகள், மதிப்பீடுகள் மற்றும் தகுதிகள் என்பன நியமங்கலூக்கான அளவு கோல்களாக அமைகின்றன அத்துடன் முன்னெற்றம் அளவிடப்பட்டு அடைவுகள் சுட்டிக்காட்டப்படும்.
நிகழ்நிலை பயிற்சித் தொகுதி
ஒரே இடத்தில் ஆங்கிலம் மற்றும் வாண்மை மிகு தொடர்பாடல் திறன் விருத்தி. டாஷ்போர்ட்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட பின்னூட்டம் வழங்கும் செயன்முறை என்பன உங்களின் பயிற்சியின் தாக்கம் மற்றும் முதலீடு அடையும் நன்மை என்பவற்றை அறிக்கையிட உதவுகின்றன. பின்வரும் வழிமுறைகல் ஊடாக உங்களின் தேவைகளை அடையும் வகையில் பாடநெறிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன:
சுய கற்றல்: பயிலுனர்களுக்கு பொருத்தமான இடங்கள் மற்றும் நேரஙளில் நடத்தப்படும் சமூக மற்றும் பணித்தல ஆங்கிலத்தை வலுப்படுத்துவதற்கான வசதியான, அளவிடக் கூடிய செலவு குறைந்த வழிகாட்டல அடிப்படையில் அமைந்த கற்றல்.
பணித்தல ஆங்கிலம்: அளவிடக்கூடிய, செலவு வினைத்திறன் மிக்க, நெகிழ்வுத்தன்மை மிக்க சுய கற்றல் நடவடிக்கைகளுடன் இணைத்து பயிற்றுனர் தலைமையில் இடம்பெறும் அமர்வுகளில் ஊடாடல் மற்றும் பின்னூட்ட செயன்முறைகள் முன்னெடுக்கப்படும்.
சமூக ஆங்கிலம்: மேன்மை மிக்க நிகழ்நிலை கற்றல் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளுடன் ஈடுபாடு மிக்க இருவழித் தொடர்பாடல் கொண்ட பயிற்றுனர் தலைமையில் இடம்பெறும் பணித்தல மற்றும் சமூக ஆங்கில நிகழ்ச்சித்திட்டங்கள்.
வாண்மை மிகு தொடரபாடல் திறன்கள்: இலக்கு வைக்கப்பட்ட, மற்றும் தாக்கம் மிக்க வகையில் அமைந்த பணித்தல பேச்சு மற்றும் எழுத்து தொடர்பாடல் திறன் விருத்தி
IELTS பயிற்றுனர்: IELTS தேர்வின் இணை உருவாகுநர்களான எம்மிடம் உங்கள் அணி மற்றும் மாணவர்கள் விரும்பும் புள்ளிகளைப் பெற அவர்களுக்கு உதவ கவனம் செலுத்தப்படும் மொழித்திறன்கள் பயிற்சியில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.
நிகழ்நிலை கற்றல் தீர்வுகள் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள.
மதிப்பீடு மற்றும் சான்றழித்தல்
திறமை மிக்கவர்களை பணிக்கமர்த்தவும், அடிப்படை திறன்கள் மற்றும் முன்னெற்றத்தை அளவிவும் இயலுமானவர்களாக நாம் உங்களை ஆக்குவதோடு உலகளாவிய ரீதியில் காணப்படும் கல்வி நிலையங்களில் மாணவர்கள் அனுமதிகளைப் பெறவும் நாம் உதவுகின்றோம்.
சோதனைகள் மற்றும் மதிப்பீட்டு தீர்வுகள் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள.