உலகின் முதற்தர ஆங்கில வல்லுநர்களிடம் ஆங்கிலம் கற்றிடுங்கள்!

உங்கள் பிள்ளை புதிய கற்பித்தல் வழிமுறைகள், வளங்கள் மற்றும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தும்  தகைமைகள் மிகுந்த, அனுபவமிக்க ஆசிரியர்களிடம் ஆங்கிலம் கற்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா?

சிறுவர் மற்றும் இளையோருக்கான எமது ஆங்கிலக் கற்கைநெறிகள் உங்கள் பிள்ளையின் மொழிக் கற்கையை மேம்படுத்துவதுவதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களது ஆங்கிலத் தொடர்பாடல் ஆற்றலையும் விருத்தி செய்கின்றன. அத்துடன் வயது மற்றும் மொழி ஆற்றலுக்கு அமைவாகவே மாணவர்கள் வகுப்புகளுக்கு இணைக்கப்படுகின்றனர்.

உங்கள் பிள்ளைக்குப் பொருத்தமான கற்கைநெறியைத் தெரிவு செய்யுங்கள்.

இரண்டாம் நிலைக்கான ஆங்கிலம் (16 – 17 வயது)

இரண்டாம் நிலை மாணவர்களுக்கான எமது கற்கைநெறிகள் போட்டித்தன்மையை எதிர்கொள்ளும் ஆற்றலை வழங்குவதோடு, உங்கள் பிள்ளை சுயமாகவும் தன்னம்பிக்கையுடனும் குழுச் சூழல்களில் செயற்படுவதற்கு உதவும்.