ஒவ்வொரு கற்கையாளரின் தேவைகளையும் நிறைவேற்றும் விதமாக நாம் பல்வகை கற்கை நெறிகளைக் கொண்டுள்ளோம். ஆகவே உங்கள் வயது, உங்கள் நிலை அல்லது உங்களது நோக்கம் என்பன எப்படியிருப்பினும் உங்களுக்கு மிகப் பொருத்தமான ஒரு கற்கைநெறி எம்மிடம் உண்டு.
ஒவ்வொரு கற்கைநெறியும் கருத்துப் பரிமாற்றம் (Interactive) மற்றும் தொடர்பாடல் முறையிலான புதிய கற்பித்தல் வழிமுறைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. கவனமாகத் திட்டமிடப்பட்ட பாட அலகுகள் உங்கள் தன்னம்பிக்கை, ஆற்றல் மற்றும் ஊக்கம் என்பவற்றை அதிகரிக்கும்.
கற்றலை மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக்குவதும் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் உடனடியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிப்பதுமே எமது நோக்கம்.
எம்முடன் இணைந்து ஆங்கிலம் கற்று, பயன்மிக்க மற்றும் மகிழ்ச்சியான வழிமுறையில் துரித முன்னேற்றம் காணுங்கள். நாம் கொண்டுள்ளவை:
- சிறந்த தகைமைகளுடைய மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள்
- சுவாரஷ்யமான, கருத்துப் பரிமாற்ற (Interactive) வகுப்புகள்
- சிறந்த நவீன வகுப்பறைகள்
- உங்களுக்குப் பொருத்தமான கற்கைநெறி