49, அல்பிரட் ஹவுஸ் கார்டன்ஸ், கொழும்பு 03 00300
Telephone number
+94 (0)11 7521 521
Telephone number
+94 (0)11 4521 521
Telephone number
info.lk@britishcouncil.org

நிலையத்தை பற்றி

எமது அனைத்து வகுப்பறைகளும் சௌகரியமானவை, குளிரூட்டப்பட்டவை அத்தோடு கற்கைக்கு ஏற்ற சகல வசதிகளையும் கொண்டவை. நாம் உங்கள் பிள்ளையின் கற்கை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் வெண்பலகை தொழில்நுட்பம், ப்ரொஜெக்டர்கள், டிவிடி/சிடி ப்ளேயர்கள் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என்பவற்றைப் பயன்படுத்துகிறோம். எமது இளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் மற்றும் இரண்டாம்நிலை கற்கைநெறிகளுக்கான ஆங்கில வகுப்புகளின் அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை 20 ஆகும்.

வயது வந்தவர்களுக்கான கற்கைநெறி ஒன்றை நீங்கள் எம்முடன் மேற்கொள்ளும்போது, எமது நூலகத்தின் ஆங்கில கற்கை சேவைகளுக்கான இலவச மேற்கோள் அங்கத்துவமும் கிடைக்கப்பெறும். இதன் மூலம் உங்களுக்கு கிடைப்பவை :

 • சுய கற்கைக்கு உதவும் ஆங்கிலக் கற்றல் வள ஆதாரங்கள்
 • உங்கள் கற்கை நெறியின் ஒவ்வொரு நிலைக்கும் அவசியமான ஒத்துழைப்பை பெற்றுத்தரும் வளங்களுக்கு வழிகாட்டும் பரந்துபட்ட சுய கற்றல் வழிமுறைகள்
 • ஆங்கில மொழி பரீட்சைகளுக்கான (IELTS, CELA) பயற்சி அங்கங்கள்
 • Iஎமது கற்பித்தல் நிலையத்தில் வயதுவந்த மாணவர் / இளம் கற்கையாளர் ஒருவராக நீங்கள் பதிவு செய்தால், நூலக அங்கத்துவக் கட்டணத்தில் கழிவொன்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

எமது கற்கைநெறிகளை கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சிலில் தொடரும் எண்ணம் உங்களுக்கு இருப்பின் - உங்கள் ஆங்கில மட்டத் தேர்வுகளை இப்பொழுது ஒன்லைனில் குறைக்கப்பட்ட கட்டணத்தில் பதிவு செய்யலாம். எமது பதிவிற்கான படிமுறையை வாசித்தறிந்து உங்கள் தேர்வுக்குப் பதிவு செய்யுங்கள்!

Colombo office entrance

நாட்காட்டி

பாடநெறி கால அட்டவணை

படிப்பின் பெயர் கட்டணம்
 English 50 hours ரூ. 44,500
 Spoken English 25 hours ரூ. 27,500
English for IELTS 50 hours ரூ. 49,500
IELTS Intensives 25 hours ரூ. 29,000
Cambridge CELTA intensive ரூ. 375,000
English for Young Learners (6 - 15 years) 25 hours ரூ. 27,500
Business Communication Skills ரூ. 49,500
Essential Business English ரூ. 48,500
English for Secondary (16 - 17 years) 50 hours ரூ. 43,500

ஒன்லைன் TKT தொகுதி 1 மற்றும் TKT தொகுதி 2 உம் 3 கற்கைநெறிகளை இயக்குவதற்கு குறைந்தபட்ச  பங்கேற்பாளர்கள் 12 அவசியம். எந்தவொரு ஒன்லைன் கற்கைநெறிக்கும் அதிகபட்சம் 20 பங்கேற்பாளர்கள் மட்டுமே.

கால தேதிகள்

தவணை திகதிகள்
1ம் தவணை 16 ஜனவரி - 01 ஏப்ரல் 2018
2ம் தவணை 18 ஏப்ரல் - 03 ஜூலை 2018
3ம் தவணை 13 ஜூலை - 20 செப்டம்பர் 2018
4ம் தவணை 07 அக்டோபர் - 18 டிசம்பர் 2018

தொடர்பு கொள்ள மற்றும் அமைவிடம்

தொலைபேசி விசாரணைகள் மணி திறக்கும்

தினம் தொடக்க நேரம்
திங்கட்கிழமை - ஞாயிற்றுக்கிழமை 08:30-17:30

பார்வையாளரின் திறப்பு மணி

தினம் தொடக்க நேரம்
திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை 08:30-17:30
சனிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை 08:30-17:30

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள

 • கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சிலின் முகவரி என்ன?
  49, அல்பிரட் ஹவுஸ் கார்டன்ஸ், கொழும்பு 03
 • தொலைபேசி இலக்கம் என்ன?
  +94 (0) 11 7521 521
 • திறந்திருக்கும் நாட்கள் மற்றும் நேரங்கள் யாவை?
  திங்கள் – சனி
  கொடுப்பனவுகள் : மு.ப. 8.30 – பி.ப. 05.00
  விசாரணைகள் : மு.ப. 8.30 – பி.ப. 05.30

  நூலகம் :
  செவ்வாய் - சனி : மு.ப. 09.00 – பி.ப. 06.00
  ஞாயிறு : மு.ப. 9.00 – பி.ப. 04.30
  திங்கள் : மூடப்பட்டிருக்கும்

 • ஆங்கில மட்டத் தேர்வொன்றை மேற்கொள்ள நான் ஒழுங்கு செய்வது எவ்வாறு?
  தயவு செய்து “கற்கைநெறி ஒன்றுக்கு நான் பதிவினை மேற்கொள்வது எவ்வாறு” இணையப் பக்கத்தைப் பார்வையிடவும்.
 • ஆங்கில மட்டத் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும்?
  ஆங்கில மட்டத் தேர்வுகள் (2017 இன் 1ம் தவணைக்குரியவை) ஆரம்பமாகிவிட்டன.
 • வகுப்பொன்றுக்கு பதிவு செய்வது எப்பொழுது?
  உங்கள் ஆங்கில மட்டத் தேர்வுகளை நிறைவு செய்ததும் நீங்கள் ஜனவரி மாத முற்பகுதி முதல் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
 • தவணைக் கொடுப்பனவு முறையில் கட்டணம் செலுத்த முடியுமா?
  உங்களிடம் கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் இருப்பின் 0% வட்டி இலகு கொடுப்பனவு திட்டத்தின் ஊடாக கட்டணத்தை செலுத்த முடியும். மேலதிக விபரங்களுக்கு எமது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்.
 • நாம் கொடுப்பனவுகளை மேற்கொள்வது எவ்வாறு?
  நீங்கள் பணமாக, கிரடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலமாக, மற்றும் காசோலைகள் மூலமும் செலுத்தலாம்.
 • என்னால் வகுப்புகளில் எப்பொழுது கலந்துகொள்ள இயலும்?
  எமது வகுப்புகள் வாரநாட்கள் மற்றும் வார இறுதிகளில் நடைபெறும். உங்களது ஆங்கில மட்டத் தேர்வின் நிலைக்கேற்ற வகுப்பில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள்.
 • நான் புத்தகங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா?
  ஆம். ஒவ்வொரு தவணையினதும் முதலாவது வாரத்தில் உங்களது கற்கைநெறி புத்தகத்தை பிரிட்டிஷ் கவுன்சிலில் மாத்திரம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
 • எனது வகுப்பில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன? 
  எமது அனைத்து வகுப்புகளினதும் அதிகபட்ச எண்ணிக்கை வகுப்பொன்றுக்கு 20 மாணவர்கள் ஆகும்.
 • பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஏனைய சேவைகள் யாவை?
  எமது நூலகம் 3000 க்கு மேற்பட்ட நூல்கள், டிவிடிகள், வெளியீடுகள் மற்றும் பத்திரிகைகளைக் கொண்டது. அத்துடன் எமது பரீட்சை சேவைகள் மற்றும் ஐக்கிய இராச்சிய கல்வி பகுதிகளையும் அணுகலாம்.
 • நூலக அங்கத்தவர் ஆவதற்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை என்ன?
  Gold வயது வந்தவர்கள் உறுப்பினர் கட்டணம் : ரூ.2500
  Gold இளம் கற்கையாளர்கள் : ரூ.2500
  Online : ரூ.2500
  Platinum : ரூ.5000
  நிறுவனங்கள் சார்ந்தவை : ரூ.15000
  **மேற்குறிப்பிட்டவை யாவும் வருட அங்கத்துவமாகும்.
 • ஆசிரியர்கள் வெளிநாட்டவர்களா அல்லது உள்நாட்டவர்களா?
  எமது ஆசிரியர் குழாம் பல்வகை ஆசிரியர்களைக் கொண்டமைந்துள்ளதோடு, ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி மற்றும் ஐக்கிய இராச்சியமானது ஒரு பல் கலாச்சார சமூகம் என்பதை அது பிரதிபலிக்கிறது. அத்தோடு எமது அனைத்து ஆசிரியர்களும் ஐக்கிய இராச்சியத் தகைமைகளைக் கொண்டிருப்பதுடன், அதியுயர் கற்பித்தல் தரம் மற்றும் பயனுறுதி உடனான கற்றல் அனுபவத்தை அவை உறுதி செய்கின்றன. எமது கற்கை அங்கங்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு உரியவை என்பதனால் அவை கற்கைக்கு மேலும் கலாச்சார பெறுமதியை சேர்க்கின்றன.