A boy and a girl in an English class with a teacher

இலகுவாக பிரிட்டிஷ் கவுன்சிலில் கற்கைநெறி ஒன்றுக்கு பதியுங்கள்.

படி 1 – ஆலோசனைக்கு பதிவு செய்தல்

  • உங்கள் குழந்தைக்கு பொருத்தமான கற்கைநெறியை நாங்கள் தெரிவு செய்ய உதவுவதற்காக கற்கைநெறிக்கு பதிவு செய்வதற்கு முன், எம்முடன் நேர்முக ஆலோசனை ஒன்றிற்கும் ஆங்கில மட்டத் தேர்விற்கும் நியமனம் ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.
  •  உங்கள் குழந்தையின் ஆங்கில மட்டத் தேர்விற்கான நியமன பதிவை ஒன்லைன் மூலமாக மேற்கொண்டு விரும்பிய திகதியையும், நேரத்தையும் தெரிவு செய்ய முடியும்.
  • ஒன்லைன் மூலம் முன்பதிவை செய்யின் இலவச ஆங்கில மட்டத் தேர்வினைப் பெறலாம்.

படி 2 – உங்கள் ஆங்கில மட்டத் தேர்விற்கு சமுகமளியுங்கள்

  • நீங்கள் ஆங்கில மட்டத் தேர்விற்கு பதிந்த பின்னர், பதிவு விபரங்கள் அடங்கிய மின்னஞ்சல் ஒன்றைப் பெறுவீர்கள்.
  • உங்கள் ஆங்கில மட்டத் தேர்விற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக பிரிட்டிஷ் கவுன்சில் கொழும்பிற்கு சமூகமளிக்க வேண்டும்.
  • பொருத்தமான கற்கைநெறியை தெரிவு செய்ய உதவுவதற்காக கற்கைநெறிக்கு பதிவு செய்வதற்கு முன் உங்கள் குழந்தை ஆங்கில மட்டத் தேர்வினைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • ஆங்கில மட்டத் தேர்வினைப் பூர்த்தி செய்ய ஏறத்தாள 1மணித்தியாலமும் 30 நிமிடங்களும் எடுக்கும்.

படி 3 – பதிவு செய்தல்

உங்கள் குழந்தையின் ஆங்கில மட்ட தேர்வின் பின், தெரிவு செய்யப்பட்ட கற்கைநெறிக்கு எமது ஆங்கில மொழி நிலையத்தில் பதிவு செய்ய மற்றும் கட்டணம் செலுத்த முடியும்.