இக் கற்கைநெறியின் விபரங்கள்

Success@University  (25 மணித்தியாலங்கள்) – யாழ்ப்பாணம்

25 மணித்தியாலங்களைக் கொண்ட இக் கற்கைநெறி பல்கலைக்கழகத்தில் தேவையான திறன்களுக்காக உங்களை பயிற்றுவிக்கிறது. இக் கற்கைநெறி அளிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்றல், கல்விசார் எழுத்தாற்றலை உங்களுக்கு அறிமுகம் செய்தல் மற்றும் விரிவுரைகளுக்கான உங்களது கிரகிக்கும் ஆற்றலை அதிகரித்தல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறது.

Success@University  கற்கைநெறியை பின்பற்றும் நீங்கள் :

  • பல்வேறு விதமான செயற்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக்கொள்வீர்கள். உதாரணமாக இடுபணி, பாத்திரங்களை ஏற்று நடித்தல், கலந்துரையாடல்கள் மற்றும் அளிக்கைகள் என்பன
  • வெற்றிகரமான அளிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அவசியமான அமைப்பு மற்றும் மொழியாற்றலை அறிந்து கொள்வீர்கள்
  • பாடங்கள் தொடர்பான பல்வேறு ஆக்கங்களை செவிமடுக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்
  • பல்கலைக்கழக தொடர்பாடல் சூழ்நிலைகளுக்கேற்ற பயனுள்ள வாக்கியங்களை அறிவீர்கள்
  • அவசியமான கல்விசார் எழுத்தாற்றலுக்கான அறிவைப் பெறுவீர்கள்
  • உங்கள் பேச்சு மற்றும் எழுத்தாற்றல் விருத்திக்கான அறிவுரைகளைப் பெறுவீர்கள்

நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புதியவராக இருப்பின், இக்கற்கை நெறிக்கு பொருத்தமான நிலையில் இருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்வதற்காக தகுதிகாண் சோதனை ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும். Success@University  கற்கைநெறி  Pre-Intermediate நிலையிலுள்ள மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

கட்டணம் மற்றும் திகதிகள்

இக் கற்கைநெறி யாழ்ப்பாண பிரிட்டிஷ் கவுன்சிலில் செப்டெம்பர் 6 முதல் 22 வரை நடைபெறும்.

கட்டணம் : ஆங்கில மட்டத் தேர்வுக்கு ரூ.1000 மற்றும் கற்கைநெறிக்கு ரூ.19,000

பதிவு செய்வது எவ்வாறு?

நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புதியவராக இருப்பின், இக்கற்கை நெறிக்கு பொருத்தமான நிலையில் இருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்வதற்காக தகுதிகாண் சோதனை ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும். தகுதிகாண் சோதனைக்கு ஒன்லைன் மூலம் பதிவு செய்ய இங்கு அழுத்துங்கள். 

இக் கற்கைநெறிகள் எங்கு கற்பிக்கப்படுகின்றன?

நாட்காட்டி மற்றும் கட்டணங்கள்

இக் கற்கைநெறி யாழ்ப்பாண பிரிட்டிஷ் கவுன்சிலில் செப்டெம்பர் 6 முதல் 22 வரை நடைபெறும்

கட்டணம் : தகுதிகாண் சோதனைக்கு ரூ.1000 மற்றும் கற்கைநெறிக்கு ரூ.19,000