உங்கள் பிள்ளையின் ஆங்கிலக் கல்வி அனுபவத்திற்கு இடைஞ்சல் ஏற்படுவதை இயன்றளவுக்குத் தவிர்க்கும் அதே வேளையில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கே நாம் முன்னுரிமை அளிக்கின்றோம். 
தேவைக்கேற்ப, நாம் இக் கற்கை நெறியை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள எமது ஆங்கில மொழி நிலையங்களில் அல்லது ஒன்லைனில் நடத்துவோம். உங்களுக்கு எது  சிறந்த வழி என்பதை நீங்களே தெரிவு செய்துகொள்ளலாம். 

 

உங்கள் பிள்ளை விளையாட்டுக்கள் மற்றும் டிம்மியின் கதைகள் மூலம் இயல்பாகவே கற்றுக்கொள்ளும்

இரண்டு வயதிற்கும் ஆறு வயதிற்கும் இடைப்பட்ட உங்கள் பிள்ளைக்கு ஆங்கில மொழியை அறிமுகப்படுத்தினால், பிள்ளை மிகவும் இயல்பாகவே ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளும்.

உங்கள் பிள்ளைக்கென வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் செயற்பாடுகள் உள்ளடங்கிய டிம்மியுடன் கற்கும் நேரம் என்ற திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆரம்ப ஆண்டுகள் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். பிள்ளைகள் ஆங்கிலத்தைக் கற்கும்போது அவர்களின் ஆக்கத்திறன், தர்க்க ரீதியான சிந்தனை மற்றும் சமூகத் திறன்களைப் பேணி வளர்க்கும் அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கின்றோம்.

இந்த வழிமுறை அவர்களின் தன்னம்பிக்கைக்கு வலுவூட்டுகின்றது. அத்துடன், அவர்களின் தொடர்பாடல் திறன்கள் மற்றும் நேர்த்தியான உச்சரிப்புக்கு உதவுகின்றது. நாம் எவ்வாறு போதிக்கிறோம் என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

ஆர்ட்மேன் அனிமேஷன் ஸ்டுடியோக்களுடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம், ஏனெனில் டிம்மி டைமின் நட்சத்திரமான உலகப் புகழ்பெற்ற கதாபாத்திரமான டிம்மியின் கதைகள் உங்கள் பிள்ளைக்கு புதிய சொற்களை சூழலில் கற்றுக்கொள்ள உதவுகின்றன.டிம்மியும் அவனது நண்பர்களும் உங்கள் பிள்ளைகளின் கற்பனையை ஈர்ப்பதன் மூலம் கதாபாத்திரங்களுடன் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவார்கள். இந்த இணைப்பு உங்கள் பிள்ளைகள் கல்வியில் காட்டும் ஈடுபாட்டை மேலும் ஆழமாக்கும். ஆங்கிலம் கற்பதற்கு ஒரு உறுதியான அத்திவாரத்தையும் நினைவைவிட்டகலாத மற்றும் உற்சாகமூட்டும் அனுபவத்தையும் அவர்கள் பெறுவார்கள்.

எமது உலகளாவிய ஆங்கில நிபுணத்துவத்தின் மூலம் உங்கள் பிள்ளையின் கல்வியை முன்னேற்றுங்கள்.

கற்கை நெறியின் விபரம்

இடங்கள்கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள எமது ஆங்கில மொழி போதனை நிலையங்கள்  அல்லது ஒன்லைன்

கட்டணம்: ரூ.13,000 x 6 தவணைகள் (1 வருட காலப்பகுதியில்)

காலப்பகுதி: 1 வருடம் (மூன்று தவணைகள்) வாரம் ஒன்றிற்கு 1 மணித்தியாலம் 15 நிமிடங்கள் (ஒரு வகுப்பு) 

வயது: 4-6 ஆண்டுகள்

4 – 5 வயதான உங்கள் பிள்ளைகள்,

 • மற்றவர்களுடன் இடைத்தொடர்பு கொள்வதன் மூலம் ஆங்கிலத்தில் பேசவும் பாடவும் தன்னம்பிக்கையைக் வளர்த்துக்கொள்வார்கள்
 • சொற்களின் அறிவை விருத்தி செய்வார்கள்
 • ஆங்கில அறிவை விருத்தி செய்வதற்குத் தொடர்ந்து அத்திவாரமிடுவார்கள்

அவர்கள் பின்வரும் வழியில் அவற்றைச் செய்வார்கள்:

 • தமது எண்ணங்களை ஆங்கிலத்தில் வெளிப்படுத்துவதன் மூலம்
 • ஆங்கில எழுத்துக்களைக் கூறுதல், 15 வரை எண்ணுதல், இலக்கங்களை விளையாட்டில் பயன்படுத்தல், பொருள்களின் அளவை விபரித்தல் உதாரணம். “பெரியது” மற்றும் “சிறியது”
 • படங்கள் மற்றும் துணைச்சாதனங்களைப் பயன்படுத்தி கதைகளில் முழுக் கவனத்தையும் செலுத்துதல், முக்கிய சம்பவங்களை நினைவுபடுத்துதல் மற்றும் எதிர்பார்த்தல்.
 • ஆங்கில மொழியில் பரிச்சயமான பாடல்கள் மற்றும் கதைகளுடன் தொடர்புபடுதல், கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளை முறையை அறிந்துகொள்ளுதல்
 • பொருள்களை வகைப்படுத்திப் பெயரிடுவதன் மூலம் சொல் வளத்தை அதிகரித்தல்
 • தாம் வரையும், எழுதும் மற்றும் பெயின்ற் செய்யும் அடையாளக் குறிகளுக்கு அர்த்தம் வழங்குதல்
 • எழுதுகருவிகளைப் பிடிப்பதற்கு மூன்று விரல்களைப் பயன்படுத்துதல்
 • தாம் விளக்கம் அளிக்கக்கூடிய அடையாளக் குறிகளைப் பயன்படுத்தி எண்ணுதல் மற்றும் பதிவு செய்தல்
 • ஒத்த இயல்புகள், வித்தியாசங்கள், வடிவங்கள் மற்றும் மாற்றங்களைக் கண்டறிதல்
 • 15 வரையான எண்களை ஒழுங்கு வரிசையாக இனங்கண்டு கூறுதல் மற்றும் விளையாட்டில் இலக்கங்களின் பெயர்ளைச் சரியாகப் பயன்படுத்துதல்
 • சில நிலைசார் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் பயன்படுத்துதல்

5 – 6 வயதான உங்கள் பிள்ளைகள்,

 • கதைகளுடன் விளையாடுவதன் மூலம் ஆங்கிலத்தில் வசனங்களைப் பேசுவதற்கான தன்னம்பிக்கையை அதிகரித்தல்
 • ஆக்கத்திறனை விருத்தி செய்தல் மற்றும் தனது சொந்த எண்ணங்களை வெளிப்படுத்த ஆரம்பித்தல்
 • ஆரம்ப கல்வியறிவுக்கான வாசிக்க மற்றும் எழுதத் தொடங்குவதற்கான  திறன்களை வளர்த்தல்   

அவர்கள் பின்வரும் வழியில் அவற்றைச் செய்வார்கள்:

 • நன்கு அறிந்த கதைகளை விபரித்தல், நடித்துக்காட்டுதல் மற்றும் மாற்றுதல்
 • கதைகளை உருவாக்கி, அவற்றை சித்திரம், நாடகம், நடனம், அசைவுகள், தகவல் தொழில்நுட்பம் அல்லது எழுத்து மூலம் வெளிப்படுத்துதல்
 • சொந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துதல்
 • தன்னைப் பற்றி எடுத்துக்கூறுதல், திறமைகளை இனங்காணுதல், விருப்புரிமைகள் மற்றும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்துதல்
 • அடையாளம் காணக்கூடிய எழுத்துக்களை உருவாக்குதல் மற்றும் சிறிய வசனங்களை எழுத முயற்சி செய்தல்
 • பொருள்களை வகைப்படுத்திப் பெயரிடுவதன் மூலம் சொல் வளத்தைப் பெருக்குதல்
 • ஒலிகளை வார்த்தைகளுடன் தொடர்புபடுத்துதல், ஒலிகளை எளிய வார்த்தைகளில் பிரித்துக்காட்டுதல் மற்றும் வாசிப்பதற்காக அவற்றைக் கலந்து ஒருங்கிணைத்தல்
 • இலக்கங்களை இனங்காணுதல் மற்றும் 20 வரை எண்ணுதல்
 • இரண்டு அல்லது மூன்று குழுக்களில் பொருள்களை எண்ணுதல் மற்றும் விளக்கம்கூறக்கூடிய அடையாளக் குறிகளைப் பயன்படுத்தி அவற்றைப் பதிவு செய்தல்
 • கதைகளில் இடம்பெறும் பரிச்சயமான சம்பவங்கள் மற்றும் அன்றாட அலுவல்களில் இடம்பெறும் பரிச்சயமான நடவடிக்கைகளைக் கட்டளையிடுதல்
 • விளையாட்டு நிலைமைகளில் பணிகள் மற்றும் அனுபவங்களை மீள உருவாக்குதல்

உங்களுக்கான எமது வாக்குறுதி

 • அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்கேற்ப  போதனை நிலையங்ளை மூட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டால்,உங்கள் பிள்ளையின் வகுப்புக்கள் ஒன்லைனில் தொடருமென நாம் உத்தரவாதம் அளிக்கின்றோம்.
 • ஒன்லைன் வகுப்புகள் அ​தே ஆசிரியருடனும் அதே வகுப்பு மாணவர்களுடனும் அதே நேரத்திலுமே நடத்தப்படும். 

நீங்கள் பதிவு செய்யும்போது கற்கை நெறித் திகதிகள் மற்றும் நேரங்கள் ஊர்ஜிதம் செய்யப்படும்.