Graduate student

சிறந்த எதிர்காலத்திற்காக உங்கள் திறன்களை விருத்தி செய்யுங்கள். 

இக் கற்கை நெறி, சமீபத்தில் உயர்தரப் பரீட்சையைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும். உங்களை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்காக உங்களுடன் இணையும் நாம், உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கவும் உங்கள் ஆங்கில அறிவை முன்னேற்றவும் உதவுவோம். இக் கற்கை நெறி, மாணவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு புத்தம்புதிய கற்கை நெறியாகும். இளவயதினர் மற்றும் வாலிபர்களுக்கான எமது உலகளாவிய பாடவிதானங்களைப் பயன்படுத்தியே Skills Plus  வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளிலும் தொழில் வாழ்க்கை தொடர்பாகவும் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலையிலுள்ள வாலிப வயதினருக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொடுக்கும் விடயங்களும் இக் கற்கை நெறியில் சேர்க்கப்பட்டுள்ளன. 

கற்கை நெறியின் ஆரம்பம் 2020 நவம்பர் 16, திங்கள் 
கட்டணம் ஒரு அமர்வுக்கு இ.ரூ. 42,000/- (40 மணித்தியாலங்கள்) 
யாழ்ப்பாணத்தில் விலை: ரூ. 36,000
இடங்கள் கொழும்பு, கண்டி, மாத்தரை மற்றும் யாழ்ப்பாணம்

​இக் கற்கை நெறி: 

  • ஒரே விதமான சிந்தனையுள்ளவர்கள் சந்தித்துத் தமக்கிடையே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.  
  • நிஜ வாழ்க்கை நிலைமைகளுக்குப் பொருத்தமான மற்றும் ஏற்புடைய திறன்களை விருத்தி செய்வதற்கு உகந்த கல்வி நுட்பங்களின் அடிப்படையிலான வேலைத்திட்டத்தைப் பயன்படுத்துகின்றது.  
  • சமர்ப்பணங்களை வழங்குதல், விவாதங்களில் பங்குபற்றுதல், விமர்சனக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தல் போன்ற பல்வேறு திறன்களில் கவனம் செலுத்துகின்றது.

சமர்ப்பணங்களை வழங்குதல் மற்றும் விவாதங்களில் பங்குபற்றுதல் மூலம் மாணவர்கள் தமது பேச்சுத் திறன்களை வளர்த்துக்கொண்டு அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தம் செய்ய நாம் உதவுகின்றோம். அறிக்கை எழுதுதல், பகுப்பாய்வு செய்தல், முக்கிய தகவல்களை விளங்கிக்கொள்ளுதல், தன்னம்பிகையுடன் அபிப்பிராயங்களை வெளியிடுதல் போன்ற வேறு முக்கிய அம்சங்களையும் இக் கற்கை நெறி உள்ளடக்குகின்றது.   

இக் கற்கை நெறி மூலம் நீங்கள் விருத்தி செய்யக்கூடிய திறன்கள் 

  • தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பு
  • விமர்சன ரீதியான சிந்தனை
  • தலைமைத்துவ மற்றும் ஆளுமை அபிவிருத்தி
  • ஆக்கத்திறன் மற்றும் கற்பனைத்திறன்
  • டிஜிட்டல் திறன்கள்

இதையும் அனுக